உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிக தொழில் முதலீடுகள் வேண்டும் : ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

அதிக தொழில் முதலீடுகள் வேண்டும் : ஸ்டாலினுக்கு பா.ஜ., வலியுறுத்தல்

ஈரோடு: வெளிநாடுகளில் இருந்து அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ., விவசாய அணி கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் அறிக்கை: இந்திய நாடு வலுவான பொருளாதாரத்திலும், வேகம் பெற்று வருகிறது. உட்கட்ட அமைப்பு, வளர்ச்சிப் பணிகளாலும்,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில் துவங்க இந்தியாவில் அளிக்கப்படும் வரி சலுகை போன்ற மத்திய அரசின் தொழிற்கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா ஈர்த்து வருகிறது.ஏற்கனவே,துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் சென்ற முதல்வர் இப்போது தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா செல்வது மத்திய அரசின் கொள்கைகளுக்கு வெளிநாடுகளில் கிடைத்த வரவேற்பே முக்கிய காரணம்.அதைக்கூறாமல் தவிர்த்துவிட்டு அதானி,அம்பானிகளுக்கு மட்டும் மோடி சலுகை செய்கிறார் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு வேதனை கொடுக்கும் அரசியல்.அதிக அந்நிய முதலீடுகளை ஈர்த்துவர முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !