பொது இடத்தில் கொடி கம்பங்-களை முழுமையாக அகற்றாமல் அலட்-சியம்
ஈரோடு: தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அர-சியல் கட்சிகள், சமுதாய அமைப்பு-களின் நிரந்தர கொடிக்கம்பங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு மாநகர பகுதி-களில், 398 அரசியல் கட்சி கொடிக்-கம்பங்கள், 12 மதம் சார்ந்த கம்பம், இரண்டு சாதிய கம்பம் மற்றும் இரு பில்லருடன் கூடிய கொடிக்கம்பம் என, 40 இடங்-களில் இருந்த, 459 கொடிக்கம்பங்-களை அகற்றினர். மாவட்டம் முழு-வதும், 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றபட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.இதன்படி மாநகராட்சி, 12வது வார்டு வைராபாளையம் மஹா மாரியம்மன் கோவில் எதிரில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்-பட்டுள்ளன. ஆனால், கம்பத்தின் அடிப்பகுதி அப்படியே விடப்பட்-டுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 2 அடி, 3 அடி உயரத்துக்கு அடிப்ப-குதி நிற்கிறது. இந்த இடம் கார்னர் பகுதி என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரவு நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. கொடிக்கம்பத்தை முழு-மையாக அகற்ற கோரிக்கை எழுந்-துள்ளது.