மின்பாதை இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை
தாராபுரம், தாராபுரம் அருகே மின் பாதை அமைத்த வகையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மதியம் கூட்டம் நடந்தது. விவசாயிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். தாசில்தார் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடந்த மூன்றாண்டுகளாக இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இன்னும் இரண்டு வாரத்துக்குள் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியதை விவசாயிகள் ஏற்று கலைந்து சென்றனர்.