உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி

விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி

ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். ஆவடி மாநக-ராட்சி ஆணையர் ச.கந்தசாமி ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டு நேற்று காலை பொறுப்பேற்றார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்து அரசு துறை-களை ஒருங்கிணைத்து, சரியான பயனாளிகளை தேர்வு செய்து, அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வேன். சுகா-தாரம் சார்ந்த பிரச்னைகள், மாநில, மாவட்ட அளவில் திட்ட-மிடல் பிரச்னைகளை உரிய இடத்தில் தெரிவித்து தீர்வு காண்பேன். விவசாயத்தை பெருக்குவது, கல்வியில் கவனம் செலுத்துவது முக்கிய பணியாக ஏற்றுள்ளேன். பெயருக்கு பதில் அளிக்கும் பணி இருக்காது. அரசை, அதிகாரிகளை மக்கள் தேடி வந்த நிலை மாறி, மக்களை தேடி அரசு நிர்வாகம் செல்லும் நிலையை மேலும் வலுப்படுத்துவேன். இவ்வாறு கூறினார். முன்-னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். தனது மனைவி, மகளுடன் வந்து பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ