புத்தொழில் திட்டம் துவக்கம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் முதல் இரண்டு 'ஸ்டார்ட் அப் கிராமங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசனுார் மற்றும் கரட்டடிபாளையம்' கிராமங்களில், தமிழக அரசின் சார்பில் 'கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தை' கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில் தமிழகத்தில், 100 தொழில் முனைவோர்களை கண்டறிந்து, தலா, 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதன்படி ஆசனுார், கரட்டடிபாளையம் கிராமங்களில் திறன் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து மானியம் வழங்கப்படும். ஜன., 10 ல் இதுபற்றிய மாநாடு, சங்ககிரியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க thenext.aakam360.comல் பதிவு செய்யலாம். கூடுதல் தகவலுக்கு, 95856 41186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.