4 வருடமாக சொத்து வரி பாக்கி காங்கேயம் ஸ்டேசனுக்கு நோட்டீஸ்
காங்கேயம் காங்கேயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ், திருப்பூர் எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சொத்துவரி, வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2021 முதல் கட்டடம் பயன்பாட்டில் உள்ளதால் இதுவரை, 2.36 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியது உள்ளது. நோட்டீஸை கண்ட, 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.