உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு இடத்தில் மர கடத்தல் புகாரால் அதிகாரிகள் ஆக்சன்

அரசு இடத்தில் மர கடத்தல் புகாரால் அதிகாரிகள் ஆக்சன்

காங்கேயம்: காங்கேயத்தில் பழைய கோட்டை சாலை போக்குவரத்து நகரில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட மரங்களை சிலர் அனுமதியுமின்றி வெட்டியுள்ளனர். அவற்றை யஆட்டோவில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற காங்கேயம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆட்டோவையும் அதிலிருந்து, 2 டன் அளவிலான வேலா மர கட்டைகளை சிறைபிடித்தனர். மரம் வெட்டி கடத்திய ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ