உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீ விபத்தில் மூதாட்டி சாவு

தீ விபத்தில் மூதாட்டி சாவு

காங்கேயம், செப். 20-காங்கேமயம் ஊதியூரை அடுத்த நிழலி, செட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதி சுப்பராயன், 90; முத்தம்மாள், 87; கரியகவுண்டன்புதுார் ஆலங்காட்டு தோட்டத்தில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு உதவியாக ஜெயமணி என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தம்மாள் தண்ணீர் காய வைக்கும் அடுப்பை பற்ற வைத்தபோது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து விட்டது. தகவலறிந்து சென்ற தம்பதியின் மகன் கந்தசாமி, அக்கம்பபக்கத்தினர் உதவியுடன் தாயை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் நேற்று இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ