மேலும் செய்திகள்
ஈரோட்டில் சாக்கடையில் மூழ்கி தொழிலாளி பலி
04-Nov-2024
ஈரோடு: ஈரோட்டில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி, மொபட்டில் சென்ற முதியவர் பலியானார். ஈரோடு, சூரம்பட்டி, சங்கு நகரை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன், 77; மொபட்டில் சங்கு நகர் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு சென்றார். பெருந்துறை சாலையில் திரும்ப முயன்றபோது, அவ்வழியாக வந்த ஸ்பெளண்டர் பிளஸ் பைக் மோதியது.இதில் ஜெய்னுலாப்தீன் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்-தினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனிடையே சூரம்பட்டி போலீசார் விசாரணையில், பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது, ஈரோட்டை சேர்ந்த ஜெய-ராமன் என்பவரின், 16 வயது மகனான பிளஸ் 1 மாணவன் என தெரிந்தது. சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
04-Nov-2024