உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பற்றி எரிந்த ஆம்னி வேன்

தீப்பற்றி எரிந்த ஆம்னி வேன்

பவானி, பவானி, பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் புண்ணியகோடி, 42; தனக்கு சொந்தமான மாருதி ஆம்னி வேனை, வீட்டுக்கு எதிரே நேற்று மதியம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் மாலையில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி