உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அவுட்டு காயுடன் ஒருவர் கைது

அவுட்டு காயுடன் ஒருவர் கைது

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீசார், அத்தியூர் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒருவர் அவுட்டு காய் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள், 60, என்பவரிடம், ஆறு அவுட்டு காய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட அவுட்டு காய் வைத்திருந்தது தெரிய வந்தது.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி