மேலும் செய்திகள்
லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி
13-Jul-2025
பவானி, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே லக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக், 28; திருமணமாகி, மனைவி, ஒரு மகள் உள்ளார். ஈரோட்டில் ஜே.சி.பி., ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு, ஹீரோ ஹோண்டா பைக்கில் வீட்டுக்கு நேற்று காலை புறப்பட்டார். பவானி-மேட்டூர் சாலையில் சேவனுார் பிரிவு அருகே, 8:30 மணியளவில் சென்றார். அப்போது எதிரே மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான வேன், தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. எதிர்பாராதவிதமாக பைக்கும், வேனும் நேருக்குநேராக மோதிக்கொண்டன.இதில் முன்பக்க டயர் அடியில் பைக் சிக்கிய நிலையில், 50 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்ட வேன், புளியமரத்தில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த அசோக்கை, அப்பகுதி மக்கள் மீட்டு பவானி அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.வேன் டிரைவரான அம்மாபேட்டையை சேர்ந்த ஆதித்யா ராஜாவுக்கு, 38, இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதில்லாமல் வேனில் பயணித்த ஆண், பெண் தொழிலாளர்கள், ௧௦ பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
13-Jul-2025