உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊஞ்சலுார் அரசுப்பள்ளி மாணவர் மாநில நீச்சல் போட்டிக்கு தேர்வு

ஊஞ்சலுார் அரசுப்பள்ளி மாணவர் மாநில நீச்சல் போட்டிக்கு தேர்வு

ஈரோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் வருவாய் மாவட்ட அளவில் நீச்சல் போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் ஊஞ்சலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 37 தங்க பதக்கம், 24 வெள்ளி பதக்கம், 11 வெண்கல பதக்கம் வென்றனர். இதில், 24 மாணவர்கள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் அசோகன், சதீஷ் ராயன் ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியை தாட்சாயினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை