உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாஸ்திரி சாலையில் திறந்தவெளி சாக்கடை அதிகாரிகள் மெத்தனத்தால் உதயம்

சாஸ்திரி சாலையில் திறந்தவெளி சாக்கடை அதிகாரிகள் மெத்தனத்தால் உதயம்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 31வது வார்டு சாஸ்திரி சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் கழிவுநீரை குழாய்களில் கொண்டு சென்று சாக்கடையில் சேரும்படி அமைத்துள்ளனர். இந்த குழாய் சாலைக்கு அடியில் செல்லும் நிலையில் அடிக்கடி உடைந்து கழிவுநீர் சாலையை ஒட்டி தேங்கியது. மக்கள் புகாரால் சாலையை பெயர்த்து உடைந்த குழாய்களை அகற்றினர். அதன் பிறகு குழாய் அமைக்க மறந்து விட்டனர்.இதனால் சாலையே திறந்த வெளி சாக்கடையாக மாறி கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. புதிய குழாய் அமைத்து, திறந்தவெளியாக மாறிவிட்ட சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை