உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனநல மருத்துவமனை திறப்பு

மனநல மருத்துவமனை திறப்பு

மனநல மருத்துவமனை திறப்புஈரோடு, அக். ௨௯-ஈரோடு, இடையன்காட்டுவலசு, சின்னமுத்து இரண்டாவது வீதியில் புதிதாக கட்டப்பட்ட ஆர்.ஏ.என்.எம்., மனநல மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. ஈரோடு மாநகர தி.மு.க., செயலாளர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் பாலுசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர், டாக்டர்களுக்கான அறைகளை திறந்து வைத்தனர். சாந்தி ஸ்பின்னிங் மில் தலைவர் துரைசாமி, கே.எம் சி.ஹெச்., மருத்துவமனை இயக்குனர் மோகன், அன்னை பாத்திமா லெதர் நிறுவன தலைவர் ஜனன பவுல், ஈரோடு சர்ஜிகல் சென்டர் தலைவர் ஜெயவேல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை டாக்டர் விஜயகுமார், மாலதி விஜயகுமார், நாகேந்திரன், பிரியதர்ஷினி, சைலேந்திரன், விமல் குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ