உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கோவில் மலைப்பாதை திறப்பு

சென்னிமலை கோவில் மலைப்பாதை திறப்பு

சென்னிமலை, சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை, 6.70 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில், காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி சென்னிமலையில் நடந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., பிரகாஷ், கலெக்டர் கந்தசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். பிறகு சாலை வழியாக கோவிலுக்கு அமைச்சர் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் சென்றனர். அதை தொடர்ந்து பா.ஜ., கட்சியினர் சஸ்வதி எம்.எல்.ஏ., தலைமையில் மலைப்பாதைக்கு பூ துாவியும் தேங்காய் உடைத்தும் பூஜை செய்து, 10க்கும் மேற்பட்ட கார்களில் மலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.*சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில், 1.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். கோவிலில் நடந்த விழாவில் துணை ஆணையர் நந்தகுமார் தலைமையில் குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ