உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை

கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை

அந்தியூர்:கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளுக்கு பணி துவக்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், எண்ணமங்கலம், மைக்கேல்பாளையம், பர்கூர், மூங்கில்பட்டி, வேம்பத்தி, சின்னத்தம்பிபாளையம், கெட்டிசமுத்திரம் பஞ்.,களில் வசிக்கும், 360 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான பணியாணை வழங்கினார். இதை தொடர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும், யூனியன் அலுவலக பணியை பார்வையிட்டார். நிகழ்வில் பி.டி.ஓ.,க்கள் சரவணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை