கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்
கோபி: கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 55, பெயின்டர்; வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையில் நேற்று காலை பேச்சு மூச்சின்றி கிடந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி உமா மகேஸ்வரி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.