உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில்தொட்டியில் நீர் இல்லாததால் அவதி

பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில்தொட்டியில் நீர் இல்லாததால் அவதி

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் பஞ்சப்பட்டி பஞ்சாயத்து சார்பில், பஸ் ஸ்டாப் அருகில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது காவிரி நீர் சரியாக வராததால், சின்டெக்ஸ் தொட்டியில் நீர் ஏற்றாமல் கிடப்பில் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால், பஸ் ஸ்டாப் பகுதியில் வரும் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று, தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். பல கடைகளில் உப்பு தண்ணீர் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து சார்பில், பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில், தண்ணீரை ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை