சுகாதாரமற்ற அங்கன்வாடி மையம் இடம் மாற்ற பெற்றோர் எதிர்பார்ப்பு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட ராசாம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். மையத்தில் போதிய அடிப்படை வசதி இல்லை என்று, பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் படிக்க, சமைக்க, விளையாட, உறங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கழிப்பிட வசதி இல்லை. மையத்தை ஒட்டி சாக்கடை உள்ளது. அதைத்தான் கழிவறையாக பயன்படுத்துகின்றனர். போதிய வசதியுடன் சுகாதாரமான இடத்துக்கு மையத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.