உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது

பாரியூர் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது

கோபி:பாரியூர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலின் குண்டம் தேர்த்-திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியுள்ளது.கோபி அருகே பாரியூரில், பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலில், அம்மன் சன்னதிக்கு எதிரே, 50 அடி நீளத்தில் குண்டம் அமைந்துள்ளது. நடப்பாண்டின் குண்டம் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தில் இருந்து புறப்பட்ட படைக்கலன் கோவிலை அடைந்ததும், பரி-வார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதையடுத்து மூலவருக்கு அபிேஷகம், விசேஷ பூஜை நடந்தது. பூச்சாட்டுதல் நிகழ்வை முன்னிட்டு, குண்டம் இறங்கும் பக்தர்கள் விரதம் இருக்க துவங்கியுள்ளனர். வரும் ஜன.,6ல் சந்தனக்காப்பு அலங்-காரம், 8ல், மாவிளக்கு பூஜை, காப்பு கட்டுதல், பூத வாகன காட்சி நடக்கிறது.முக்கிய நிகழ்வாக ஜன.,9ல் பக்தர்கள் பூ மிதிக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. அதையடுத்து, ஜன.,10ல் திருத்தே-ரோட்டம், 11ல், மலர் பல்லக்கு, 12ல், கோபியில் தெப்போற்-சவம், 13 மற்றும் 14ல், மஞ்சள் நீர் உற்சவம், 15, 16ல், புதுப்பா-ளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம், 17 மற்றும் 18ல், நஞ்சகவுண்-டம்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம், ஜன.,18ல், அம்மன் திருக்கோவிலை வந்தடைதல், மறுபூஜை நடக்கிறது.விழா துவங்கியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்-ணிக்கை அதிகரித்துள்ளது. அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்-டத்தில், மிளகு கலந்த உப்பு கற்களை கொட்டி ஏராளமான பக்-தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.வெள்ளி அலங்கார தீபங்கள்கொண்டத்துக்காளியம்மனுக்கு, தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. தவிர ஆடி வெள்ளி, நவராத்திரி, லட்ச்சார்ச்சனை மற்றும் குண்டம் திருவிழா சமயத்தில், பஞ்சமுக தீபம், பூரண-கும்ப தீபம் உள்ளிட்ட வெள்ளி அலங்கார தீபத்தால் அம்மனுக்கு தீபாராதனை நடக்கும். இதனால் தற்போது வெள்ளி அலங்கார தீபங்கள், தீபாராதனைக்கு தயார் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை