உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர் சேர்க்கைக்கான முகாமில் மக்கள் ஆர்வம்

வாக்காளர் சேர்க்கைக்கான முகாமில் மக்கள் ஆர்வம்

வாக்காளர் சேர்க்கைக்கான முகாமில் மக்கள் ஆர்வம்ஈரோடு, நவ. 17-ஈரோடு மாவட்டத்தில், நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம், 2,222 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது.தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2025-சிறப்பு சுருக்கத்திருத்தத்தின் ஒரு பகுதியாக நேற்றும், இன்றும், வரும், 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளில் நேற்று முகாம் நடந்தது. புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், விலாசம் உள்ளிட்டவைகளில் மாற்றம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவை தொடர்பான படிவங்களை வாக்காளர்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வழங்கினர்.அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அப்பகுதி கட்சி நிர்வாகிகள், பொதுமக்களிடம் முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், ஆர்வத்துடன் படிவங்களை வழங்கி சென்றனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மொடக்குறிச்சி யூனியன் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாமிநாதபுரம் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் முகாமை ஆய்வு செய்தார். மொடக்குறிச்சி தாசில்தார் சந்திரசேகர், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் லோகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை