உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயானத்துக்கு நிரந்தர பாதை கேட்டு அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

மயானத்துக்கு நிரந்தர பாதை கேட்டு அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

பவானி பவானி அருகே ஒரிச்சேரி பஞ்., பாரதிநகர் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தொட்டியன் தோட்டம் பகுதியில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. மயானத்துக்கு சென்று வர அப்பகுதியில் உள்ள ஓடை பாதை மற்றும் அதனை ஒட்டிய தனி நபருடைய பட்டா நில வண்டிப்பாதை இருந்ததாக தெரிகிறது.பட்டா நில வண்டிப்பாதையை நிலத்தின் உரிமையாளர் உழுது, அந்த வழியை வேலி கொண்டு அடைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த அம்மாசை என்பவர் இறந்ததையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பட்டா நில வண்டிப்பாதை வழியாக மயானம் செல்ல அனுமதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் சடலத்துடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.பவானி தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பட்டா நிலம் வழியாக செல்ல இப்போது அனுமதிக்க முடியாது என்றும், நிலத்தை அளந்து, அதில் புறம்போக்கு நிலம் உறுதி செய்யப்பட்ட பின், அதன் வழியாக அனுமதிக்கப்படும் என்று கூறினர். ஆனால், அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சடலத்தை பட்டா நிலத்தின் வழியாக துாக்கிக் கொண்டு மயானம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை