மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
09-May-2025
அந்தியூர்,வெள்ளித்திருப்பூர் அருகே ரெட்டிபாளையத்தில், 10 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் மூன்று சென்ட் இடத்தை அருகிலுள்ள தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற ஓராண்டுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றும் கோரிக்கை வலுத்தும், வருவாய்த்துறையினர் அலட்சியம் செய்து வந்தனர்.இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மக்கள், அந்தியூர்-கொளத்துார் சாலையில் உள்ள ரெட்டிபாளையத்தில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளித்திருப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால், கலைந்து சென்றனர். மறியலால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
09-May-2025