உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீமான் பிரசாரத்துக்கு தடை கோரி மனு

சீமான் பிரசாரத்துக்கு தடை கோரி மனு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி தியாகராஜனிடம், பெரியார்--அம்பேத்கர் கூட்டமைப்பு நிர்வாகிகள், நேற்று மனு வழங்கி கூறி-யதாவது:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரம், சுய லாபத்துக்காக மக்களிடம் கலவரத்தை துாண்டும் வகையில் இனம், மொழி அடிப்படையில் பிரிவினை-வாத கருத்துக்களை பேசி வருகிறார். கடந்த, 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தலித் சமூகத்தை இழிவாக பேசினார். இதனால் மோதல் ஏற்பட்டு, வழக்குகள் பதி-வாகி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தற்போது இடைத்-தேர்தல் பிரசாரத்தை வாய்ப்பாக பயன்படுத்தி, சீமான் எதையா-வது பேசி கலவரத்தை துாண்ட முயல்கிறார். அவர் மீது வழக்குப்-பதிவு செய்வதுடன், இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.விதி மீறல் என புகார்'தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், கலெக்டர், மாநகராட்சி அலுவலகத்தில் மனுக்களை பெறுவதில்லை. இதற்-காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரியார்-அம்-பேத்கர் கூட்டமைப்பு நிர்வாகிகளை, போலீசாரே அழைத்து சென்று மனு வழங்க செய்தது தேர்தல் விதிமீறலாகும். இதுபற்றி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பப்படும்' என்று, நாம் தமிழர் கட்சி வேட்-பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை