உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில்லால் மாசுபாடு தற்கொலைக்குஅனுமதி கோரி மனு

மில்லால் மாசுபாடு தற்கொலைக்குஅனுமதி கோரி மனு

மில்லால் 'மாசுபாடு' தற்கொலைக்குஅனுமதி கோரி மனுஈரோடு:சென்னிமலை, அம்மாபாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் சில குடும்பத்தார், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் மனு வழங்கி கூறியதாவது: அம்மாபாளையம் கிருஷ்ணா நகரில் வசிக்கிறோம். இங்கு இரு ஆண்டுக்கு முன் ஒரு ஸ்பின்னிங் மில் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பின்றி பஞ்சு கழிவு காற்றில் பறந்து வீடு முழுவதும் ஒட்டி நிற்கிறது. மூச்சு குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது. உணவு, குடிநீர், தரை, படுக்கை என அனைத்திலும் படிகிறது. இதுபற்றி ஏற்கனவே புகார் செய்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, 'மாசுபாட்டை உறுதி செய்து' தாலுகா அலுவலகம், உள்ளாட்சி அமைப்புக்கு நடவடிக்கை கோரி மனு வழங்கினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நேரடியாக உடல் நலம் பாதிக்கிறது. இதுபற்றி மாவட்ட அளவிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது விஷம் குடித்து சாவதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை