மேலும் செய்திகள்
பட்டா மாற்றத்தில்தொடரும் ஏமாற்றம்
06-May-2025
ஈரோடு, மே 20க்கட்டாம்பாளையம் அரிஜன குடியிருப்பு பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:பெருந்துறை தாலுகா எக்கட்டாம்பாளையம் அரிஜன குடியிருப்பில் வசிக்கிறோம். அருகே வாய்க்கால்புதுார், காந்தி நகர் பகுதியிலும் இச்சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள நொய்யல் ஆற்றுக்கு வடபுறம் அரசு புறம்போக்கில், 50 சென்ட் இடத்தில் பல ஆண்டாக சுடுகாட்டுக்காக பயன்படுத்தி வருகிறோம். இவ்விடத்தின் அருகே நிலம் வைத்துள்ளோர், இவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்ய பல முறை முயன்றும், எங்கள் எதிர்ப்பால் கைவிட்டனர். தற்போது ஆக்கிரமிப்பு செய்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை எழும் அளவுக்கு பல தரப்பில் அழுத்தம் தருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டு நிலத்தை அளவீடு செய்து, தொடர்ந்து எங்கள் பயன்பாட்டுக்கு வழங்கி, ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
06-May-2025