தண்ணீரை ஆய்வு செய்ய வலியுறுத்தி மனு வழங்கல்
சென்னிமலை, சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.அனைத்து நீர் ஆதாரங்களான மின்மோட்டார் பொருத்திய ஆழ்துளை கிணறு, கை பம்பு, திறந்தவெளி கிணறுகளை குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்து தண்ணீர் தர பரிசோதனை செய்து, மக்கள் அறியும் வகையில் அறிக்கை வழங்க வேண்டும் என, கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* ஈங்கூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., ஜெயக்குமார் சிறப்பாளராக பங்கேற்றார். ஈங்கூரில் குடிநீர் கேட்டு மறியல் செய்தவர்கள் மீது, போடப்பட்ட வழக்கை அரசு வாபஸ் பெற இங்குள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.