உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு

8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு

ஈரோடு, டிச. 24-தமிழக மக்கள் நலக்கட்சி நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. சில தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக, 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். ஆனால், குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தொழிலாளர்களின் உடல் நலம், பொருளாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ