உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 28ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

28ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

ஈரோடு:ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி வாசுதேவன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,), நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், வரும், ௨௮ம் தேதி காலை, சென்னிமலையில் உள்ள எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை