உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல் பவானிசாகர், அக். 9-பவானிசாகரை அடுத்த நால்ரோடு அண்ணா நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். சில நாட்களாக சரிவர வினியோகம் செய்யப்படாததால் குடிநீரின்றி அவதிக்கு ஆளாகினர். பவானிசாகர் யூனியன் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பு.புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் போக்குவரத்து முடங்கியது. பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ