உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவார பணி

இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவார பணி

தாராபுரம்: இந்து முன்னணி சார்பில், தாராபுரம் தென்தாரை சின்ன காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று காலை உழவாரப்பணி நடந்தது. இதேபோல் என்.என்.பேட்டை வீதி ராஜ விநாயகர் கோவில், மற்றும் குளத்து புஞ்சை தெரு, நேரு நகர் உள்பட ஒன்பது கோவில்களில் இந்து முன்னணி தொண்டர்கள், உழவார பணியில் ஈடுபட்டனர். மேலும் சங்கரண்டாம்பாளையம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட குள்ள காளிபாளையம், புதுப்பாளையம் என சுற்றுவட்டார பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கோவில்களில், உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ