பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்ஈரோடு, டிச. 25-ஈரோட்டில் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில், 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால் தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்தும், இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாததை கண்டித்து, ஈரோடு மாநகர மாவட்ட பா.ம.க., சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபு, மாநில துணை தலைவர்கள் பரமசிவம், வெங்கடாசலம், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மொய்தீன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.