உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறையில் உள்ள தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ

சிறையில் உள்ள தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ

ஈரோடு, ஈரோட்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, சிறையில் உள்ள தொழிலாளி மீது, போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, ஏ.பி.டி. சாலையை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ், 20, கட்டட தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 10ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த, 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை, தன் வீட்டுக்கு வர செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகார்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்தனர். சந்தோஷ் ஏற்கனவே, வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய வழக்கில், கருங்கல்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் இருந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !