உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் காவல் உதவி மையம் வீண்

கொடிவேரியில் காவல் உதவி மையம் வீண்

கோபி, கோபி அருகே கொடிவேரி அணைக்குள் நுழையும் வழியில், பல ஆண்டுகளுக்கு முன் கடத்துார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், காவல் உதவி மையம் துவங்கப்பட்டது. இங்கு ஒரு எஸ்.ஐ., தலைமையில் ஓரிரு போலீசார் முன்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, போதையில் சேட்டை செய்வோர் அடக்கி வாசித்தனர். தற்போது காவல் உதவி மையம் இருந்தும், இடம் தெரியாமல் போய்விட்டது. இதனால் அதற்காக வைத்த பெட்டி, அணை பிரிவில் காட்சி பொருளாகி விட்டது. இதனால் அணைக்கு வரும் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. குடிமகன்களை தடுக்க, சமூக விரோத செயல்களை ஒடுக்க, காவல் உதவி மையம் மீண்டும் இயங்க, சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை