திருமா மீது ஆபாச பதிவு; போலீசார் வழக்குப்பதிவு
காங்கேயம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனை, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சதீஸ்குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அரை நிர்வாண உடையுடன், பாலியல் குற்றவாளி என ஆபாசமாக பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து காங்கேயம் சட்டசபை தொகுதி வி.சி., செயலாளர் ஜான் நாக்ஸ் தலைமையிலான கட்சியினர், காங்கேயம் போலீசில் நேற்று புகாரளித்தனர். இதன் அடிப்படையில் காங்கேயம், பழையகோட்டை, சித்தம்பலத்தை சேர்ந்த சதீஸ்குமார் மீது, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.