உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவே கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் பறவை காவடி, வேல் காவடி, பத்து செட் அலகு, விமான அலகு, பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் கோவில் முன்பாகவும், வீடுகளிலும் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து இன்று காலை 7:33 மணிக்கு கோவிலில் கம்பம் பிடுங்குதல், 10:00 மணிக்கு அம்மன் மலர் பல்லக்கு திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. நாளை (ஜன.,2) இரவு 7:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை