உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா

பொங்காளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா

அந்தியூர்:அந்தியூர் அருகே, பிரம்மதேசத்தில் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, அம்மனிடம் வாக்கு கேட்கப்பட்டது. வாக்கு கொடுத்ததும், முதலில் கோவில் பூசாரி குண்டம் இறங்கினார்.இதையடுத்து விரதமிருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரம்மதேசம், பிரம்மதேசம் புதுார், வெள்ளையம்பாளையம் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ