உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 27ல் அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம்

வரும் 27ல் அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம்

ஈரோடு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தின், பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 27 மதியம், 2:00 மணிக்கு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்கப்படும். புகார்கள், மனுக்கள் இருப்பின் தபால் மூலம் வரும், 24க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அல்லது வரும், 24 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மனுக்களை வழங்கலாம். மனுவில் புகார் குறித்த முழு விபரமும் இருக்க வேண்டும். உறையின் மேற்பகுதியில் 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும். இத்தகவலை, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ