விபத்தில் பேராசிரியை பலி
பவானி: -பவானி அருகேயுள்ள குண்டு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமணி, -54; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை தனியார் கலை அறிவியல் கல்லுாரி கணிதவியல் பேராசிரியை. கல்லுாரி செல்வதற்காக ஓலா எலக்ட்ரிக் பைக்கில், நேற்று பகல், 12:00 மணியளவில், ஹெல்மெட் அணிந்து சென்றார்.சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற நிலையில், லாரிக்குள் விழுந்தார். இதில் பின்பக்க டயர் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.