உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு காப்பு

மாஜிஸ்திரேட்டிடம் தகராறு வாலிபருக்கு காப்பு

ஈரோடு தென்முகம் வெள்ளோடு தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் மயில் வாகனம், 40. கருங்கல்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2017ல் நடந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை ஈரோடு நீதித்துறை நடுவர் எண்.1 நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது திடீரென இலவச சட்ட வக்கீல் மற்றும் நீதிமன்ற நடுவர் எண்.1 மாஜிஸ்திரேட்டிடம் வாய் தகராறு செய்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக, நீதிமன்ற எழுத்தர் ரூபா, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து மயில்வாகனத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி