கொங்கர்பாளையத்தில் வீடுகளில் கறுப்பு கொடியேற்றி போராட்டம்
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில், குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் இடத்தில் இருந்து, மக்களின் கடும் எதிர்ப்பை மீறி, நீதி-மன்ற ஆணைப்படி தனியார் சிலர் குடிநீர் கொண்டு செல்ல, 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைத்தனர்.'இதில் விதிமீறல் இருப்பதாகவும், குழாய் கொண்டு செல்லும் பாதை வரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என்று வலியு-றுத்தியும், கொங்கர்பாளையம் கிராம மக்கள், கோபி தாலுகா அலு-வலகத்தில் நான்கு நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர்.'குழு அமைத்து, பைப் லைன் போடப்பட்ட இடங்களில் மக்கள் முன்னிலையில் முழுமையாக ஆய்வு செய்யப்படும்' என்று, தாசில்தார் சரவணன் உறுதி கூறியதால், காத்திருப்பு போராட்-டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.இந்நிலையில் கொங்கர்பாளையம் ஊராட்சியை சுற்றியுள்ள வினோபா நகரை மையமாக வைத்து, வினோபா நகர், எஸ்.டி.காலனி, கோவிலுார், தோப்பூர், கொங்கர்பாளையம், புது வலவு, குன்னாங்கரடு உள்ளிட்ட பகுதி மக்கள், நேற்று தங்களின் வீடுகளில் கறுப்பு கொடியேற்றியுள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஊராட்சி சார்பில் போடப்பட்ட தீர்மானத்துக்கு எதிராகவும், விதி மீறலுடனும் குழாய் பதிக்கும் பணி நடந்துள்ளது. இதற்கு துணை போன அரசு அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்-டுள்ளோம். இவ்வாறு கூறினர்.