உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய்விற்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்காங்கேயம், டிச. 14- ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி, காங்கேயம் அருகே கவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும். தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில அவை தலைவர் பாலசுப்பிரமணியம் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை