உள்ளாட்சி துறை ஊழியர்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்,:கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து, ஊதியம் வழங்க வேண்டும், துாய்மை பணியாளர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு ஊதியம் மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டும், பொங்கல் கருணை தொகையாக, ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், நிர்வாகிகள் சுப்பிரமணியன், கந்தசாமி, கணேசன், ராஜா முகமது, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.