உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாக்டோ-ஜியோ சார்பில்கோரிக்கை விளக்க பேரணி

ஜாக்டோ-ஜியோ சார்பில்கோரிக்கை விளக்க பேரணி

கரூர்,:கரூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில், கோரிக்கை விளக்க பேரணி, மாவட்ட கூட்டு தலைவர்கள் வேலுமணி, அன்பழகன் ஆகியோர் தலைமையில் நேற்று மாலை நடந்தது.கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் தொடங்கிய பேரணியை, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் பெரியசாமி தொடங்கி வைத்தார். பேரணி கரூர் தலைமை தபால் நிலையம் முன், நிறைவு பெற்றது. அதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பேரணியில், மாநில துணைத்தலைவர் செல்வராணி, நிர்வாகிகள் தமிழ் மணியன், சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !