மூன்றாவது நாளாக போராட்டம்: கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு
ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், மூன்றாவது நாளாக நேற்று கருப்பு ஆடை அணிந்து, ஈரோடு, குமலன்குட்டை பூமாலை வணிக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். ஒப்-பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்-படி மூன்றாவது நாளாக நேற்றும் அனைத்து பணியாளர்களும், கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.