உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 220 மனுக்கள் வந்தன. தொழிலாளர் நல துறை மூலம் ஒரு பயனாளிக்கு திருமண உதவி தொகையாக, ரூ.20 ஆயிரம், இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிவாரண உதவி தொகை இரு பயனாளிகளுக்கு, ரூ.90 ஆயிரம், விபத்து மரணம் மற்றும் ஈமசடங்கு நிவாரண உதவி தொகை ஒரு பயனாளிக்கு, ௨.௦௫ லட்சம், அமைப்பு சாரா ஓட்டுனர் நல வாரியம் மூலம் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்க, ஒரு லட்சம் ரூபாய் மானியத்தை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !