உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 24 பயனாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

24 பயனாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், குண்டடம் வட்டாரத்தை சேர்ந்த, 14 பயனாளிகளுக்கு, 2.௧௦ லட்சம் ரூபாய் மதிப்பிலும், பொங்கலுார் வட்டாரத்தை சேர்ந்த, 10 பேருக்கு, ௧.௫௦ லட்சம் ரூபாய் மதிப்பிலும், 24 பயனாளிகளுக்கு, தலா, 15 ஆயிரம் மானியத்துடன் கூடிய தள்ளுவண்டிகளை, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்-கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி, தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தடுப்பணைக்கு பூஜை குண்டடத்தை அடுத்த பெரிய குமாரபாளையத்தில், உப்பாறு ஓடையின் குறுக்கே, 7.80 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்க நேற்று மாலை பூஜை நடந்தது. அமைச்சர்கள் சாமி-நாதன், கயல்விழி பணிகளை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ