கட்டணமின்றி குடிநீர் இணைப்பு புளியம்பட்டி நகராட்சி அழைப்பு
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் அனைத்து வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம், இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இன்னும், 500 இணைப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சாலை சீரமைப்பு கட்டணம் ஏதுமின்றி புதிய இணைப்பு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. முதலில் வரும், 500 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்க இயலும். நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது