உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு :தொழிலாளர் தினமான நேற்று, ஈரோடு ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, சேலம் கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ., ஈரோடு கிளை செயலாளர் தர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ரயில்வே துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை பளுவுக்கு தகுந்தாற்போல, தேவையான தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்காமல், தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கில் வேலை வாங்கும் அதிகாரிகளை கண்டிப்பது.க்ஷவேலை செய்யவில்லை என பல காரணம் கூறி, 'சார்ஜ் ஷீட்' என தண்டனை வழங்குவதை நிறுத்த வேண்டும். சி.எல்., உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு பல முறை ஆன்லைனில் விண்ணப்பித்தும், அனுமதி வழங்காமல் மன உளைச்சலை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.கிளை தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் விக்னேஸ்வரன், பிரகாஷ், தினேஷ், தனபால், கோபி உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை